தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் முன், அக்., 29 ல் மாலை 5:30 மணிக்கு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். நடப்பு கல்வியாண்டில் தரம் உயர்த்தப்படும் 50 உயர்நிலைப் பள்ளிகளின் பட்டியலை உடனடியாக வெளியிடவும், தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும்
உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நேர்மையான சிறப்பு மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். கடந்த ஆண்டு வட்டார வளமைய மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு மாறுதல் வழங்க வேண்டும். உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மட்டும் கடந்த 2 ஆண்டுகளாகியும் எம்.பில்., உயர் படிப்பிற்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்கும் அரசாணையில் திருத்தம் வெளியிடாமல் இருப்பதை கண்டிப்பது உட்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதுகுறித்து மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக