தேசிய ஊரக திறனாய்வுத் தேர்வு நேற்று நடந்தது. தமிழகத்தில் 57 ஆயிரம் மாணவ மாணவியர் எழுதினர். பள்ளிகளில் 8ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று 9ம் வகுப்பில் படித்துவரும் மாணவ மாணவியர் மேல் வகுப்பில் கல்வி உதவித் தொகை பெறும் வகையில் ஆண்டுதோறும் தேசிய ஊரக திறனாய்வுத் தேர்வு மத்திய அரசின் மூலம்
நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திறனாய்வுத் தேர்வு நேற்று நடந்தது. தமிழகத்தில் சென்னையைத் தவிர 176 மையங்களில் இந்த தேர்வு நடந்தது.
9ம் வகுப்பில் படித்துவரும் 57 ஆயிரம் மாணவ மாணவியர் தேர்வு எழுதினர். மாவட்ட அளவில் தேர்ச்சி பெறும் மாணவ மாணவியர்கள் மேல் வகுப்பு படிப்பதற்காக தேர்வு செய்யப்பட்டு தலா ரூ.1000 மாதந்தோறும் வழங்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக