தமிழ்நாடு பிஎட் பட்டதாரிகள் சங்க (அறிவியல் பிரிவு)
மாநிலதலைவர் செருவாவிடுதி ப.பாலசுப்பிரமணியன் அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
அந்த மனுவில்,"தமிழக அரசு அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளில் தேவையான அளவிற்கு அறிவியல் பிரிவு பட்டதாரிஆசிரியர்களை நியமிக்கவேண்டும். மேலும் இடஒதுக்கீட்டுபிரிவினருக்கு வழங்கிய 5 சதவீத மதிப்பெண் தளர்வை,நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து நிலைநிறுத்த வேண்டும்.நலத்துறை பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களைவிரைந்து நிரப்ப வேண்டும். ஆசிரியர் மாணவர் விகிதம் 1:30 என்பதைஉறுதிப்படுத்திட வேண்டும். தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்குஆசிரியர்களை விரைந்து நியமனம் செய்யவேண்டும். மேலும் நடப்புஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வை விரைந்து நடத்தவேண்டும்.வெயிட்டேஜ் முறையை மறுபரிசீலனை செய்து, பதிவு மூப்பு, வயது,பிஎட் தேர்வில் பெற்ற மதிப்பெண், ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்றமதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் பணி நியமனம்செய்யவேண்டும்" இவ்வாறு அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக