லேபிள்கள்

12.10.14

நூறு சதவீத பஸ் பாஸ் வழங்க அரசு உத்தரவு

மாணவர்களுக்கு 100 சதவீத பஸ் பாஸ் வழங்கியதை, பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும் என தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளின் மாணவ, மாணவியர்களுக்கு இலவச பஸ் பாஸ்
வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூலையில் பள்ளிகள் இதற்காக விண்ணப்பித்து பஸ் பாஸ் வாங்கின. அவ்வாறு வாங்காதவர்களுக்கு வசதியாக, கடந்த ஆண்டுக்குரிய பஸ் பாஸ் அனுமதி சீட்டை, ஆகஸ்ட் வரை பயன்படுத்தி கொள்ள அனுமதியளித்தது.
தமிழகத்தில், இதுவரை கன்னியாகுமரி, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், சென்னை ஆகிய மாவட்டங்கள் மட்டுமே, அனைத்து மாணவர்களுக்கும் (நூறு சதவீதம்) பஸ் பாஸ் அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில், தாமத சேர்க்கை, விண்ணப்பிப்பதிலும், வழங்குவதிலும் ஏற்பட்ட கால தாமதம் உள்ளிட்ட காரணங்களால் 100 சதவீத பஸ் பாஸ் பெறப்படவில்லை. இதையடுத்து அனைத்து மாணவர்களுக்கும், 100 சதவீத இலவச பஸ் பாஸ் வழங்கி, அதன் விபரத்தை அரசுக்கு அனுப்பும்படி, தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அதன் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக