லேபிள்கள்

10.11.14

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வு: இன்று முதல் விண்ணப்பம்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை (நவம்பர்10) முதல் விநியோகிக்கப்பட உள்ளன.
1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நவம்பர் 10 முதல் 26-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

சென்னையில்?..சென்னை மாவட்டத்தில் இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் சென்னை நந்தனத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நவம்பர் 10-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை விநியோகிக்கப்படும் என சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனிதா தெரிவித்தார். விண்ணப்பத்தின் விலை ரூ.50 ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக