லேபிள்கள்

13.11.14

மேலூரில் பள்ளி மாணவியிடம் சில்மிஷம் : ஆசியரிருக்கு சரமாரி அடி

மதுரை மாவட்டம் மேலூரில் பள்ளி மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற ஆசிரியரை பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மே-லூரில் இயங்கும் நடுநிலைப்பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியர் பாண்டி என்பவரே தாக்குதலுக்கு உள்ளானவர் ஆவார். அந்த பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் அவர் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அந்த மாணவி பள்ளியை விட்டு வெளியேறி கூச்சலிட்டதால் பொதுமக்கள் பள்ளியில் திரண்டனர். இதையடுத்து பள்ளியில் இருந்து தப்பியோடிய ஆசிரியர் தமது உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்தார். பொதுமக்கள் தெரிவித்த புகாரின் பேரில் ஆசிரியர் பாண்டியை போலீசார் அழைத்து வந்தனர்.
அப்போது ஆத்திரமடைந்த மக்கள் பாண்டி மீது மக்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். அவர்களிடமிருந்து பாண்டியை மீட்ட போலீசாரை எதிர்த்து பொதுமக்கள் திடிர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆசிரியரை கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்களின் சாலை மறியலால் மேலூர் - திருச்சி நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக