பிளஸ் 2 தனித்தேர்வுக்கு பின், மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டல் கேட்டு விண்ணப்பித்த மாணவர்களின் முடிவுகள், இன்று காலை, இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.
தனித்தேர்வு, செப்டம்பர், அக்டோபரில் நடந்தது. இதன் முடிவிற்குப் பின், ஏராளமான மாணவ, மாணவியர், மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு கேட்டு, தேர்வுத் துறையிடம் விண்ணப்பித்தனர். மறு மதிப்பீடு, மறுகூட்டல் பணி முடிந்ததை அடுத்து, மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின் பதிவெண், www.student.hse14rtrv.in என்ற இணையதளத்தில், இன்று காலை, 11:00 மணிக்கு வெளியிடப்படுகிறது. மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்கள் மட்டும், வரும், 17ம் தேதி காலை, 11:00 மணிக்கு, சென்னையில் உள்ள தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் ஆஜராகி, புதிய மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக