லேபிள்கள்

4.1.15

அரையாண்டுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு உடனடி தேர்வு

விருதுநகர் மாவட்டத்தில் அரையாண்டுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்த மாணவ, மாணவிகளுக்கு உடனடித் தேர்வு வருகிற 5-ம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளில் தொடங்கி நடைபெற இருப்பதாக முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
கடந்த மாதம் 10-ம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு நடைபெற்றது. இதில்,அனைவரும் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். இதற்கான விடைத்தாள் திருத்தம் செய்து மாணவ, மாணவிகளிடம் அளிக்கப்பட்டது. அதில், குறிப்பிட்ட அளவு மாணவ, மாணவிகள் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்த மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்துள்ளனர்.இந்நிலையில் இவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இதற்காக வருகிற 5-ம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளில் தேர்வு நடைபெற இருப்பதாக அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக