தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் அரசு கலை மற்றும் அறிவியல்கல்லூரிகளில் 797 புதிய பாடங்கள் அறிமுகம் ஆகியுள்ளன.
இந்த நிலையில் தற்போது (2014-15ம் கல்வியாண்டு) மேலும் 163 பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இதில் 26 இளங்கலை பாடங்கள், 23 முதுகலை பாடங்கள், 62 எம்.பில் பாடங்கள், 52 பிஎச்டி பாடங்கள் அடங்கும். தமிழகத்தில் உள்ள 34 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த பாடத்திட்டங்கள் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு கல்லூரிகளுக்கு புது பாடத்திட்டங்கள் எதுவும் அனுமதி வழங்கவில்லை.இதற்கிடையே கடந்த ஆண்டுகளில் ஒரு இளங்கலை பாடத்திற்கு ஒரு ஆண்டுக்கு 2 பேராசிரியர் வீதம் 6 பேராசிரியர்கள் என்ற அளவில் நியமிக்கப்பட்டனர். ஆனால், தற்போது புதிதாக நியமிக்கப்பட உள்ள பேராசிரியர்கள் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாடப்பிரிவுக்கு ஓராண்டுக்கு 26 உதவி பேராசிரியர்கள் வீதம் 3 ஆண்டுகளுக்கு 78 பேரும், முதுகலை பாடப்பிரிவுக்கு ஓராண்டுக்கு 23 பேராசிரியர்கள் வீதம் 46 பேரும் என மொத்தம் 124 பேர் மட்டுமே நியமிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.எம்பில், பிஎச்டிக்கு நியமன அறிவிப்பு இல்லை. இதனால், மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து விரிவிரையாளர்கள் தரப்பில் கூறுகையில், ‘ஏற்கனவே உதவிப் பேராசிரியர்கள் பற்றாக்குறையுடன் வகுப்புகள் நடக்கும் நிலையில் புதிய பாடங்களை அனுமதிக்கும் போது தேவையான உதவிப் பேராசிரியர்கள் நியமிக்க அரசு உத்தரவிடவேண்டும்’ என்றனர்.
மேலும் போதுமான அளவு மாணவர்கள் சேர்வதை உறுதிப்படுத்த முடியும் என்றால் இந்த கல்வி ஆண்டிலேயே (201415) பாடங்களை தொடங்கலாம் என உயர்கல்வித்துறை சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது. ஆனால், நடப்பு கல்வி ஆண்டில் ஏற்கனவே ஒரு செமஸ்டர் தேர்வு முடிந்து ஜனவரி மாதம் தொடங்கிவிட்ட நிலையில் இனி மாணவர்களை சேர்த்து இந்த ஆண்டுக்கு உரிய முழு பாடத்திட்டத்தையும் நடத்தி மாணவர்களை தயார் செய்வது எந்த அளவு சாத்தியம் என கல்லூரி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக