பிளஸ் 2 விடைத்தாள் திருத்துவதற்காக தமிழகம் முழுவதும் 64 விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 தேர்வு கடந்த 5ம் தேதி தொடங்கியது. மொழிப்பாடத் தேர்வுகள் நடக்கிறது. ஆங்கிலப் பாடத் தேர்வுகள் இன்றும் நாளையும் நடக்கிறது. இதையடுத்து 16ம் தேதி முதல் மொழிப்பாடத் தேர்வு விடைத்தாள்களை திருத்த தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 64 விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
24000 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்த நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து 16ம் தேதி முதன்மைத் தேர்வர்கள் மொழிப்பாட விடைத்தாள்களை திருத்துவார்கள். அதற்கு பிறகு மொழிப்பாட ஆசிரியர்கள் திருத்துவார்கள். சென்னையில் 4 இடங்களில் விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டில் இந்த மையங்களில் மொழிப்பாடங்களுக்கு தனியாகவும், மற்ற பாடங்களுக்கு தனியாகவும் மையங்கள் ஒதுக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு சென்னையில் அமைந்துள்ள 4 மையங்களிலும் அனைத்து பாடங்களின் விடைத்தாள்களும் திருத்த தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. மொழிப்பாடங்களை பொருத்தவரை தமிழ், ஆங்கில பாடங்களில் தலா இரண்டு தாள்கள் இருப்பதால் மாணவ, மாணவியரின் எண்ணிக்கைப்படி 17.50 லட்சம் விடைத்தாள்கள் திருத்த வேண்டிய நிலை உள்ளது. இவை மார்ச் 31ம் தேதி வரை திருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 31ம் தேதி வரை மற்ற பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கும். ஏப்ரல் முதல் வாரத்தில் கணக்கு, அறிவியல் உள்ளிட்ட மற்ற பாடத் தாள்கள் திருத்த தொடங்குவார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக