தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், அரசு தொடக்கப் பள்ளிகள் ஆகியவற்றில் ஆசிரியர் &மாணவர் விகிதாச்சாரப்படி, அதிகமாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடனடியாக தொடக்க கல்வி இயக்குநர் பொதுத்தொகுப்புக்கு சரண் செய்ய வேண்டும்.
இதற்கான படிவங்களில் பணியிடத்தின் பெயர், இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியரா, எந்த பாடம் எடுக்கிறார், எந்த பள்ளியில் பணியாற்றுகிறார், பணி அனுமதி வழங்கப்பட்ட அரசாணை எண் மற்றும் நாள் ஆகிய விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். சரண் செய்யப்பட்ட பணியிடங்களை எக்காரணம் கொண்டும் காலிப் பணியிடங்களில் காட்டக் கூடாது.
மேற்கண்ட பணியிடங்கள் ஒப்படைப்பு செய்யப்பட்ட விவரங்களை தொடக்க கல்வி அலுவலர்களிடம் இருந்து பெற்று மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் வைத்துக் கொள்ள வேண்டும். இதுதொடர்பாக, ஏதாவது குறைகள் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள், அவர் சார்ந்த அலுவலர்களே பொறுப்பாவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக