தமிழகம் முழுவதும் 6 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் 11முதல் 21 வரை நடைபெற உள்ளன.
1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு முப்பருவ முறை அமலில் உள்ளதால், இந்தத் தேர்வுகள் மூன்றாம் பருவத் தேர்வுகளாக நடைபெற உள்ளன.
பிளஸ் 2 தேர்வு மார்ச் 5-ஆம் தேதி தொடங்கியது. பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வு மார்ச் 11-ஆம் தேதி தொடங்கியது.பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 19-ஆம் தேதி தொடங்க உள்ளது.
இந்த நிலையில், 6 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத்துக்கான தேர்வுகள் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் கடைசி வாரத்தில் நடைபெற உள்ளன.பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 22-ஆம் தேதியில் இருந்தும், தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு மே முதல் தேதியில் இருந்தும் கோடை விடுமுறை வழங்கப்படும் எனத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக