லேபிள்கள்

12.3.15

ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு கலந்தாய்வு

ஆதிதிராவிடர்- பழங்குடியினர் நலப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு வரும் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தமிழக அரசு
அறிவித்துள்ளது.இதுகுறித்து, ஆதிதிராவிடர் நல இயக்குநர் எஸ்.சிவசண்முகராஜா புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலைப் பள்ளிகளில் 33 ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டோருக்கு வரும் 16-ஆம் தேதி காலை 10 மணிக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.சென்னை சேப்பாக்கம் ஆதிதிராவிடர் நல இயக்குநர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்தக் கலந்தாய்வில் பங்கேற்போர் உரிய சான்றுகளை எடுத்து வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக