தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகத்தை, மே மாதம், இரண்டாம் வாரத்தில் துவக்க, மருத்துவக் கல்வி இயக்ககம்
திட்டமிட்டுள்ளது. புதிய அரசு மருத்துவக் கல்லூரியில், 100 மாணவர்களை சேர்க்கவும் முயற்சி நடக்கிறது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே மாதம், 10ம் தேதிக்குள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகத்தை, மே மாதம், இரண்டாவது வாரத்தில் துவங்கவும், முதற்கட்ட கலந்தாய்வை, ஜூன், மூன்றாம் வாரம் நடத்தவும், மருத்துவக் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.
புது மருத்துவ கல்லூரி?
சென்னை, அரசினர் தோட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரியில், அரசு அறிவித்தபடி, இந்த ஆண்டில், 100 எம்.பி.பி.எஸ்., இடங்களில் மாணவர் சேர்க்கை நடக்குமா என, கேள்வி எழுகிறது. இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்குனர் கீதாலட்சுமி கூறுகையில், ''கல்லூரி, செயல்பாட்டுக்கு தயாராக உள்ளது. மருத்துவ கவுன்சில் குழு, கடந்த வாரம் ஆய்வு நடத்தி முடித்துள்ளது. விரைவில், அனுமதி கிடைத்து விடும். 100 எம்.பி.பி.எஸ்., இடங்களை சேர்க்கும் வகையில், அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது,'' என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக