லேபிள்கள்

15.4.15

ஐ.ஏ.எஸ்., முதன்மை ஆளுமை தேர்வு இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்


ஐ.ஏ.எஸ்., முதன்மை தேர்வில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, அகிலஇந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையத்தில், மாதிரி இலவச முதன்மை தேர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


இலவசம்

இதுகுறித்து, மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: 
சென்னை பி.எஸ்.குமாரசாமிராஜா சாலை, காஞ்சி வளாகத்தில், அகில இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையம் இயங்கி வருகிறது. ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட இனத்தை சேர்ந்த, 325 மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் முதன்மை தேர்வுகளுக்கான பயிற்சி, தங்குமிடம், உணவு, நுாலக, கணினி பயன்பாடு ஆகியவற்றை இலவசமாக அளித்து வருகிறது. கடந்த 12ம் தேதி நடந்த முதன்மை தேர்வில், தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களுக்கு, இலவச மாதிரி ஆளுமை தேர்வு பயிற்சியை நடத்த உள்ளது. இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க, இன்று துவங்கி, ஏப்., 18 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை, அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்; பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், விண்ணப்பித்த முதன்மை தேர்வு விண்ணப்பத்தின் நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

எப்போது?

பங்கேற்க உள்ள மாணவர்களுக்கு, வரும் 23, 24, 25ம் தேதிகளில், மாதிரிஆளுமை தேர்வு பயிற்சிகள் நடத்தப்படும். பயிற்சியை, அனுபவமிக்க இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல்பணி, கல்லுாரி பேராசிரியர்கள் அளிப்பர். ஆளுமை தேர்வுக்காக, புதுடில்லி செல்லும் மாணவர்களுக்கு, 10 நாட்கள் தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும். ஆளுமை தேர்வுக்காக டில்லி செல்லும் மாணவர்களுக்கு, பயணப்படியாக, 2,000 ரூபாய் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, www.civilservicecoaching.com என்ற இணையதளத்திலோ, 044 -- 2462 1475 என்ற தொலைபேசி எண்ணிலோ தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக