லேபிள்கள்

29.1.16

பிளஸ் 2 தேர்வு பிப். 2 முதல் 'தத்கல்' விண்ணப்பம்

சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்கள், பிப்., 2ம் தேதி முதல், 'தத்கல்' முறையில் விண்ணப்பிக்கலாம்.தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மார்ச்சில் நடக்க உள்ள, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு, ஏற்கனவே, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், நாளை முதல், பிப்., 2ம் தேதி வரை, www.tndge.in என்ற இணையதளத்தில், 'ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்ப எண், பிறந்த தேதியை பயன்படுத்தி, ஹால் டிக்கெட் பெற முடியும்.

எழுத்துத்தேர்வுடன், செய்முறை தேர்வு அடங்கிய பாடங்களில், செய்முறை தேர்வில், 40 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்று தேர்ச்சி பெறாதவர்கள், செய்முறை தேர்வை மீண்டும் கண்டிப்பாக செய்வதுடன், எழுத்துத்தேர்வும் எழுத வேண்டும். அதிகபட்ச மதிப்பெண், 200 கொண்ட, செய்முறை மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதோர், மீண்டும் செய்முறை தேர்வுக்கு வர வேண்டும்.
முதன்முறையாக, பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பித்த நேரடி தனித்தேர்வர்கள், மொழி பாடத்தின், இரண்டாம் தாள் மற்றும் பகுதி - 3ல், சிறப்பு மொழி எழுதும் தேர்வர்கள், கேட்டல், பேசுதல் திறன் தேர்வுகளை கண்டிப்பாக செய்ய வேண்டும். இதற்கான விவரத்தை, தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரை அணுகி, அறிந்து கொள்ளலாம்.
ஏற்கனவே விண்ணப்பிக்க தவறியோர், சிறப்பு அனுமதி, 'தத்கல்' திட்டத்தில் பிப்., 2ம் தேதி முதல், 4ம் தேதி வரை, சேவை மையங்களுக்கு, உரிய ஆவணங்களுடன் நேரில் சென்று, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம். 'தத்கல்' தேர்வர்களுக்கு, சென்னை, மதுரை, கோவை, திருச்சி, கடலுார், வேலுார் மற்றும் திருநெல்வேலி ஆகிய தலைமை இடங்களில் மட்டுமே, தேர்வு மையம் அமைக்கப்படும். தனியார், 'பிரவுசிங்' மையம் மூலம் விண்ணப்பிக்க முடியாது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக