லேபிள்கள்

29.1.16

ஜனவரி 30, 31 மற்றும் பிப்ரவரி 1 ஜேக்டோ மறியல் போராட்டத்தில் முழுமையாக பங்கேற்க தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அழைப்பு

இதுகுறித்து மாநில பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
ஜேக்டோ 15 அம்ச கோரிக்கைகளை
நிறைவேற்ற கோரி நாளைமுதல்( ஜனவரி 30, 31) பிப்ரவரி 1 வரை மூன்று நாட்கள் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த 3 கட்ட போராட்டங்களை போன்றே இந்த மறியல் போராட்டத்திலும் நமது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் ஆசிரியர் தோழர்கள் முழுமையாக கலந்து கொண்டு மறியல் போராட்டத்தினை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

தினசரி மறியல் போராட்டத்தில் பங்கேற்கும் TNGTF இயக்க ஆசிரியர் பட்டியலினை ஒன்றியம் வாயிலாக மாவட்ட பொறுப்பாளர்கள் பெற்று தங்கள் மாவட்டத்திற்கென உள்ள TNGTF மாநில பொறுப்பாளர்களிடம் தெரிவிக்க அன்புடன் கேட்டு கொள்வதாக அச்செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக