லேபிள்கள்

31.8.16

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 2 ஆண்டு போனஸ்: அருண் ஜெட்லி அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 ஆண்டு போனஸ் விரைவில் வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார் மேலும் குறைந்த பட்ச ஊதியம் அதிகரிக்கப்படும் என்றும் கூறினார்.


12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 2-ம் தேதி முதல் (வெள்ளிக்கிழமை) நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதில் மத்திய அரசு பணியாளர்கள் 33 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்; ‘7வது ஊதிய கமிஷனின் படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 2014-15 மற்றும் 2015-2016ம் ஆண்டிற்கான திருத்தியமைக்கப்பட்ட 2 ஆண்டு போனஸ் வழங்கப்படும்’ என்றார். இதனிடையே அரசு வழங்கும் திருத்தியமைக்கப்பட்ட போனஸ் திட்டத்தால் ஆண்டுக்கு ரூ.1,920 கோடி செலவாகும் என்று கூறப்படுகிறது.

இதினிடையே விவசாயம் சாராத தொழிலாளர்கள் குறைந்த பட்ச தினக்கூலியாக ரூ.246 லிருந்து ரூ.350 ஆக உயர்த்த வேண்டும் என்ற நிபுணரின் அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக பேசிய ஜெட்லி; ‘விவசாயம் சாராத தொழிலாளர்கள் குறைந்த பட்ச தினக்கூலியாக ரூ.350 என நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக