லேபிள்கள்

28.8.16

'நீட்' வினாத்தாள் மூலம் சிறப்பு பயிற்சி கட்டணம் பல மடங்கு உயர்வு

நீட்' தேர்வு வினாத்தாள் மூலம், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பதில், தனியார் பள்ளிகள் ஆர்வம் காட்டுகின்றன. இதற்கான கட்டணம், பல மடங்கு உயர்ந்துள்ளது.
மருத்துவப் படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவுத் தேர்வு கட்டாயமாகி உள்ளதால், தமிழக தனியார் பள்ளிகள், பிளஸ் 2 மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சிகளை அளிக்கத் துவங்கி உள்ளன. இந்த ஆண்டில், இரண்டு கட்டமாக நடந்த நீட்
தேர்வுகளின் வினாத்தாள்களை நகல் எடுத்து, அதிலுள்ள வினா வகைப்படி, பயிற்சி அளிக்கப்படுகிறது. ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனத்தில் சேர்வதற்கான, ஜே.இ.இ., தேர்வின், நான்கு ஆண்டுகளின் வினாத்தாள்கள் அடிப்படையிலும், பயிற்சிகள் துவங்கப்பட்டுள்ளன. இதற்காக தனியார் பள்ளிகளும், பயிற்சி மையங்களும், ஒப்பந்தம் செய்துள்ளன. மாணவர்களிடம் தலா, 20 ஆயிரம் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளின் இந்த நடவடிக்கைகளால், தனியார் பயிற்சி மையங்களிலும், கட்டணம் உயர்ந்துள்ளது. பிரபல பயிற்சி மையங்களில், ஆண்டு முழுவதும், வார இறுதி நாட்களில் பயிற்சியில் பங்கேற்க, 1.5 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு முன், அதிகபட்சம், 50 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது.
நுழைவுத் தேர்வால், கல்வித்தரம் உயர்கிறதோ, இல்லையோ, பயிற்சி கட்டணம் பல மடங்கு எகிறி உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக