லேபிள்கள்

3.9.16

இடைநிற்றல் குழந்தைகளை கண்காணிக்க புதிய 'சாப்ட்வேர்'

பள்ளியில் சேர்க்கப்பட்ட இடைநிற்றல் குழந்தைகளை கண்காணிக்க புதிய 'சாப்ட்வேர்' செயல்படுத்தப்பட உள்ளது.
ஆறு முதல் 14 வயதுடைய இடைநிற்றல் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் பள்ளி செல்லாத அல்லது இடைநிற்றல் குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

2011--12 ல் 63,178 இடைநிற்றல் குழந்தைகள் இருந்தன.2015--16 ல் 43,455 ஆக குறைந்துள்ளது. இதில் 42,443குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த குழந்தைகளை கண்காணிக்க அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் புதிய 'சாப்ட்வேர்' செயல்படுத்தப்பட உள்ளது. இதில் இடைநிற்றல் குழந்தைகளின் முழு விபரம், தொடர் மதிப்பீடு, அதிகாரிகளின் ஆய்வு போன்றவை பதிவு செய்யப்பட உள்ளன.

இதன் மூலம் அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வந்து செல்வதை உறுதி செய்ய முடியும். படிப்பை கைவிட்டாலும், அவர்களை எளிதில் கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக