லேபிள்கள்

29.8.16

தொலைதூரக் கல்வி மையங்களுக்கு கடிவாளம் யு.ஜி.சி., புது உத்தரவு!

தொலைதுார கல்வி மையங்களில் முறைகேடுகள் நடக்காத வண்ணம், மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் வகையில், 14 வகையான தகவல்களை இணையதளத்தில், 15 நாட்களுக்குள் வெளிப்படுத்த பல்கலை மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.


பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) கட்டுப்பாட்டில் செயல்படும் கல்வி நிறுவனங்கள் பலவற்றில், தொலை துார கல்விமையம் செயல்பாட்டில் உள்ளது. தொலைதுார கல்வி மைய செயல்பாட்டில் பல்வேறு வரையறைகள் உள்ளன.

ஆனால், அனுமதி பெறாத பாடப்பிரிவுகளை நடத்துதல், அங்கீகாரம் புதுப்பிக்காமை, எல்லைகள் கடந்து தேர்வு மையம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள், தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இதனால், யு.ஜி.சி., கட்டுப்பாட்டில் செயல்படும் பல்கலை, கல்வி நிறுவனங்களின் தொலைதுார கல்வி மையம் சார்ந்த முழுமையான தகவல்களை இணையதளத்தில் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன் படி, பாடப்பிரிவுகள், அங்கீகார விபரங்கள், ஒருங்கிணைப்பாளர் விபரம், கல்வி நிறுவனங்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ள எல்லைகள், கிளை மைய முகவரி, தேர்வு மைய விபரங்கள், புரிந்துணர்வு ஒப்பந்த விபரம், மாணவர்கள் சேர்க்கை, அங்கீகார கடித நகல், உள்ளிட்ட, 14 விபரங்களை கட்டாயம் வெளியிடவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து தகவல்களையும், 15 நாட்களுக்குள் கல்வி நிறுவனங்களின் இணைய தளத்தில் பதிவிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக