பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு, டிச., 7ல் துவங்கி, 23ல் முடிகிறது.
இது குறித்து, பள்ளி கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு
மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வு, மாநில அளவில், பொதுவான வினாத்தாள் அடிப்படையில் நடத்தப்படுகிறது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு, டிச., 7ம் தேதியும்; 10ம் வகுப்புக்கு, டிச., 9ம் தேதியும் தேர்வுகள் துவங்கும். டிச., 7, 8ல், மொழித் தாள்கள்; டிச., 9, 10ல், ஆங்கிலம்; டிச., 14, 15, 16, 19, 21, 23ல், முக்கிய பாடங்களுக்கு தேர்வு நடக்கும்.
காலை, 10:00 மணிக்கு துவங்கும் தேர்வு மதியம், 1:15க்கு முடியும். 10 நிமிடம் வினாத்தாள் படிக்கவும், 5 நிமிடம் மாணவர்களின் விபரங்களை எழுதவும் நேரம் வழங்கப்படும்.
டிச., 9, 10ல், மொழித்தாள்கள்; 14, 15ல், ஆங்கிலம்; 17ல், கணிதம்; 19ல், அறிவியல்; 21ல், விருப்ப மொழி; டிச., 23ல், சமூக அறிவியல். காலை, 10:00 முதல் பகல், 12:45 வரை தேர்வு நடக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக