நான்கு மாதங்களாக இழுத்தடிக்கப்பட்ட, சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, நேற்று துவங்கியது. இரவு வரை நீடித்த கலந்தாய்வில், 200க்கும் மேற்பட்டோர், இடங்களை தேர்வு செய்தனர்.
தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி உள்ளிட்ட, இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு, சென்னை, மதுரை உட்பட, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 356 இடங்கள்; 21 சுயநிதி கல்லுாரிகளில், 1,000 இடங்கள் உள்ளன. இதற்கான, விண்ணப்பம் பெறப்பட்டு, நான்கு மாதங்கள் ஆகியும், கலந்தாய்வு நடத்தப்படாததால், மாணவர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னை, அரும்பாக்கம், சித்த மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், நேற்று துவங்கியது. முதல் நாளில், 740 பேர் அழைக்கப்பட்டனர்; 500 பேர் மட்டும் பங்கேற்றனர். கலந்தாய்வு, இரவு, 10:00 மணி வரை நீடித்தது; 200க்கும் மேற்பட்டோர், அரசு கல்லுாரிகளில் ஒதுக்கீடு பெற்றனர்; இன்றும், கலந்தாய்வு நடக்க உள்ளது.அதில், 'கட் ஆப்' மதிப்பெண், 178 வரை உள்ள, 1,014 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். நாளையுடன், கலந்தாய்வு முடிவடைகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக