லேபிள்கள்

10.11.16

TNTET-2016:ஆசிரியர் தகுதித்தேர்வு எப்போது? -கல்வி அமைச்சர் விளக்கம்.

 தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி, அதன் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.


       இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசின்ஆசிரியர் தகுதித் தேர்வு முறை செல்லும் என்று இன்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பை அடுத்து ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த இனி தடையேதும் இல்லை.
இது குறித்து தமிழக கல்வித்துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன் கூறியதாவது :ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் தீர்பானது அரசுக்கு சாதகமான வெளியாகியுள்ளது வரவேற்கதக்கது. தகுதித்தேர்வு நடத்த இனி தடையேதும் இல்லை.எனவே தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு இம்மாத இறுதிக்குள்  வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக