லேபிள்கள்

24.12.16

10ம் வகுப்பு பொதுத் தேர்‌வு - தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க ஜன. 4 கடைசி நாள்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்‌வெழுதும் தனித்தேர்வர்கள் வரும் 26ஆம் தேதி‌ முதல் ஜனவரி 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை இ‌யக்ககம் அறிவித்துள்ளது.

தனித்தேர்வர்கள் அந்தந்த‌ ‌கல்வி மாவட்டங்களில் அமைக்கப்‌பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களில் இணையவழியில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணமான 175 ரூபாயை ரொக்கமாகச் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

வரும் 26ஆம் தேதியிலிருந்து ஜனவரி 3ஆம் தேதிக்குள்‌ அந்தந்த மாவட்ட‌‌ கல்வி அலு‌வலர் அலுவலகங்களில், அறிவியல் பாட செய்முறை பயிற்சி மையங்களில் சேர பதிவு செய்ய வேண்டும். பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது பயிற்சி வகுப்பில் சேர்ந்த சீட்டையும் இணைக்க வேண்டும். மேலும் இதர விவரங்களை www.dge.tn.gov.in என்ற‌ இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக