லேபிள்கள்

18.12.16

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் புறக்கணிப்பா?

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ் தேர்வுக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டு, விடுமுறை இன்றி தேர்வு நடத்தப்படுகிறது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், பிற பாடங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம்,
தமிழுக்கு கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. 
அதை நிரூபிக்கும் வகையில், தமிழ் பாடங்களுக்கு விடுமுறை இன்றி, தேர்வு நடத்தப்படுகிறது. அரசு தேர்வுத் துறை, நேற்று முன்தினம் அறிவித்த அட்டவணை படி, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு, தமிழ் பாடத்தில், இரு தாள்களுக்கு, தேர்வு நடக்கிறது. இதில், இரு தாள்களுக்கும் இடையே, படிப்பதற்கு கால அவகாசமின்றி, தொடர்ந்து இரு தினங்கள் நடத்தப்படுகின்றன. மற்ற தேர்வுகளுக்கு, இரு நாட்களுக்கு மேல், படிக்க அவகாசம் தரப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழாசிரியர்கள் கூறியதாவது: தமிழக அரசின் தேர்வுத் துறை நடத்தும் தேர்விலேயே, தாய்மொழியான தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்காவிட்டால், வேறு யார் முக்கியத்துவம் அளிப்பர். அதனால் தான், உயர் கல்வியில் மாணவர்கள், தமிழ் பாடத்தில் பட்டம் பெறவோ, அதில் ஆராய்ச்சி மேற்கொள்ளவோ தயங்குகின்றனர்.

ஆசிரியர்கள் நியமனத்திலும், அனைத்து பாடங்களுக்கான ஆசிரியர் காலியிடங்களை நிரப்பிய பின், தமிழ் பாடத்திற்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்; இது துரதிருஷ்டவசமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக