லேபிள்கள்

24.12.16

புகாரில் சிக்கிய ஈரோடு பள்ளிக்கு தேர்வு மையஅங்கீகாரம் ரத்து.

பிளஸ் 2 தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததால், ஈரோடு, ஆதர்ஷ் மெட்ரிக் பள்ளிக்கு, தேர்வு மைய அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுபிளஸ் 2 தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற பலரின் விடைத்தாள்களை, தேர்வுத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 


இதில், சில விடைத்தாள்களில், ஒரே மாதிரியான கையெழுத்தில் விடைகள் எழுதப்பட்டிருந்தன. இதுகுறித்து, அதிகாரிகள் நடத்திய ரகசிய விசாரணையில், ஈரோட்டில் உள்ள, ஆதர்ஷ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில், ஆசிரியர் துணையுடன் விடைகள் எழுதப்பட்டது தெரியவந்தது. பிளஸ் 2 தேர்வின் போது, அந்த பள்ளியில், அதிகாரிகள் நடத்திய ஆய்வில், பல மாணவர்கள், 'பிட்' வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தப்பட்டன. இதுகுறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், பெற்றோர் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், வரும் மார்ச்சில் நடக்கவுள்ள பொதுத்தேர்வுக்கு, தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அதில், புகாருக்கு உள்ளான, ஈரோடு ஆதர்ஷ் மெட்ரிக் பள்ளியின் தேர்வு மைய அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த பள்ளியில் படிக்கும், 500க்கும் மேற்பட்ட பிளஸ் 2 மாணவர்கள், வேறு பள்ளிகளுக்கு சென்று, தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக