லேபிள்கள்

7.2.17

'ரூபெல்லா தடுப்பூசி போட்டால் காய்ச்சல் வரும்; அச்சம் வேண்டாம்',-- சுகாதாரதுறை அமைச்சர்

 ''தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி போட்ட, ஒரு வாரத்துக்கு பின், காய்ச்சல், அலர்ஜி போன்றவை ஏற்படும்; அச்சமடைய வேண்டாம்,'' என, அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
தட்டம்மை மற்றும் ரூபெல்லா என்ற பிறவி ஊனம் நோய்களை ஒழிக்க, உலக சுகாதார நிறுவனமும், மத்திய அரசும் இணைந்து, மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசி போடப்படுகிறது. ஒன்பது மாதம் முடிந்த குழந்தைகள் முதல், 15 வயதிற்குட்பட்டோர் வரை, இந்த தடுப்பூசி போட்டு கொள்ளலாம். மாநில முழுவதும், 1.80 கோடி குழந்தைகளுக்கு, தடுப்பூசி போடும் பணி, நேற்று துவங்கியது. 

சென்னை, வேளச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில், தடுப்பூசி முகாமை, அமைச்சர் விஜயபாஸ்கர் துவங்கி வைத்தார். அவர் பேசுகையில், ''தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி போட்ட, ஒரு வாரத்துக்கு பின், காய்ச்சல், அலர்ஜி போன்றவை ஏற்படும்; மக்கள் அச்சமடைய வேண்டாம்,'' என்றார்.முகாமில், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறை இயக்குனர் குழந்தைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தமிழகம் முழுவதும், 56 ஆயிரத்து, 862 அரசு, தனியார் பள்ளிகள்; 11 ஆயிரத்து, 599 அங்கன்வாடி மையங்கள் என, 68 ஆயிரத்து, 461 இடங்களில், தடுப்பூசி முகாம் நடக்கிறது.இதில், 12 ஆயிரம் நர்சுகள் இடம் பெற்றுள்ளனர். வரும், 28 வரை, காலை, 8:00 முதல் மாலை, 4:00 மணி வரை, தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக