மதுரை, ''அனைத்து மாவட்டங்களிலும் 'ஸ்மார்ட்' வகுப்பறைகளை துவக்க முன்னேற்பாடுகள்செய்ய வேண்டும்,''எனதுவக்கக் கல்வித்துறை இயக்குனர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
அனைத்து மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர்கள்ஆய்வுக் கூட்டம் மதுரையில்நடந்தது. துவக்கக் கல்வித்துறை இயக்குனர் கார்மேகம் தலைமை வகித்தார்.
இணை இயக்குனர்கள் நாகராஜமுருகன், பாஸ்கர சேதுபதி முன்னிலை வகித்தனர்.மதுரை முதன்மைக் கல்வி அலுவலர் மாரிமுத்து வரவேற்றார்.
கார்மேகம் பேசியதாவது: துவக்கக் கல்வியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க,நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளி ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை துவங்கி
யுள்ளதால், பள்ளிகளில் பழமையான வகுப்பறை
களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய
வேண்டும். மாநிலம் முழுவதும் பயன்படுத்த முடியாத வகுப்பறைகள் குறித்து நவ.,15 க்குள் கணக்கெடுத்து, அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.
டெங்குவை தடுக்க பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்கவிடாமல், 100 சதவீதம் துாய்மைப் பணி மேற்கொள்ள வேண்டும்.
துவக்க, நடுநிலை பள்ளிகளில் 60 கோடி ரூபாய் மதிப்பில்3000 'ஸ்மார்ட்' வகுப்பறைகளைதுவங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும்'ஸ்மார்ட்' வகுப்பறைகளை தேர்வு செய்து, துவக்குவதற்கானமுன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்றார்.
மதுரை மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர் ஜெயபாலன், உதவி துவக்கக் கல்வி அலுவலர் ஜான்கென்னடிஏற்பாடுகளை செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக