லேபிள்கள்

1.11.17

அனுமதியின்றி உயர் கல்வி படித்த ஆசிரியர்களுக்கு, 'கிடுக்கிப்பிடி'

அரசின் அனுமதி பெறாமல், உயர் கல்வி படித்த, 4,300ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பணியில் இருக்கும் போது,
மேற்படிப்பு படிக்க, பாஸ்போர்ட் எடுக்க, வெளிநாடு செல்ல மற்றும் சொத்துகள் வாங்க, அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாவிட்டால், சம்பந்தப்பட்டோர் மீது, 'சஸ்பெண்ட், டிஸ்மிஸ்' உள்ளிட்ட, பல நடவடிக்கைகள் பாயும். இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறையில், தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும், 4,300 ஆசிரியர்கள், தங்கள் துறையின் முன் அனுமதி பெறாமல், உயர் கல்வி படித்துள்ளனர்.படித்து முடித்த பின், பின் ஏற்பு அனுமதி தரும்படி, கல்வித் துறைக்கு கடிதம் கொடுத்துள்ளனர்.

இது குறித்து, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, துறை செயலரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து, முன் அனுமதி பெறாதவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அதன் அறிக்கையை தாக்கல் செய்ய, தொடக்கக் கல்வி இயக்குனரகத்துக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அதனால், நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், சங்க நிர்வாகிகளை அணுகி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக