சண்டிகர்: ஹரியானாவில் நடக்கும், ஹிந்து மத விழாவில் பங்கேற்கும் பணி அளிக்கப்பட்டதற்கு, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில்,
பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, யமுனா நகர் மாவட்டத்தில், கபால மோட்சம் விழா, விரைவில் நடக்க உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை, மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் செய்கின்றன. இதில், ஆசிரியர்களுக்கு சில பணிகள் கொடுக்கப்பட்டு உள்ளன.
விழா ஏற்பாடு தொடர்பான பயிற்சி வகுப்பு, சமீபத்தில் நடந்தது. இதில் பங்கேற்கும்படி, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது; ஆனால், பல ஆசிரியர்கள் பங்கேற்கவில்லை.
அவ்வாறு பங்கேற்காதவர்களிடம் விளக்கம் கேட்டு, மாவட்ட கல்வித் துறை, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.
இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 'கோவில் விழாவில், பூசாரிகளாக செயல்பட முடியாது' என, ஆசிரியர்கள் சங்கம் கூறியுள்ளது.
இது குறித்து, பா.ஜ., செய்தித் தொடர்பாளர், ஜவஹர் யாதவ் கூறியதாவது:
கோவில் விழாவில், பூசாரிகளாக செயல்படும்படி உத்தரவிடவில்லை. ஹிந்து மதத்தை புகுத்தும் நோக்கம் ஏதுமில்லை.
லட்சக்கணக்கில் மக்கள் வருவர் என்பதால், பிரசாதம் வழங்குவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், மாணவர்களின் கல்வியும் பாதிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக