லேபிள்கள்

5.12.17

தமிழ் கட்டாயம்: பள்ளி கல்வியில் குழப்பம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், பிற மொழி மாணவர்களுக்கு, தமிழ் பாடம் கட்டாயம் ஆக்கப்பட்டதில், இந்த ஆண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


தமிழ் கட்டாயம்: பள்ளி கல்வியில் குழப்பம்


தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தமிழ் வழி, ஆங்கில வழி மற்றும் பிற மொழி மாணவர்களுக்கு, அவர்களின் தாய்மொழிகளில் பாடங்கள் நடத்தப்படுகின்றன.தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது, ஹிந்தி மற்றும் அரபிக் போன்ற மொழிகளிலும் பாடங்கள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில், 10ம் வகுப்பு வரை, தமிழ் பாடம் கட்டாயம் என்ற சட்டம், 2006ல்அமலுக்கு வந்தது. அப்போது முதல், பிற மொழி மாணவர்களுக்கு, ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என, ஒவ்வொரு வகுப்புக்கும், படிப்படியாக, தமிழ் அறிமுகம் செய்யப்பட்டது.

உத்தரவு


இதையடுத்து, 2006ல், ஒன்றாம் வகுப்பு படித்தவர்கள், 2016ல், 10ம் வகுப்பு தேர்வை எழுதினர். அவர்களுக்கு, மொழி பாடத்தில் தமிழை கட்டாயமாக எழுத,பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது.அதனால், பிற மொழி பாட மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெயரளவில் அறிமுகம் செய்யப்பட்ட, தமிழ் கட்டாயம் என்ற சட்டத்தில், முறையாக தமிழ் பயிற்றுவிக்கப்படவில்லை என, புகார் எழுந்தது.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவில், அந்த மாணவர்களுக்கு, தமிழ் பாடம் எழுதுவதில் விலக்கு அளிக்கப்பட்டது.இந்நிலையில், இந்த ஆண்டும், பிற மொழி மாணவர்கள், 10ம் வகுப்பில், தமிழை கட்டாய பாடமாக எழுத உத்தரவிடப்பட்டு உள்ளது. இதில், சில குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும், தமிழில் தேர்வு எழுத விலக்கு அளிக்கப்பட்டுஉள்ளது.
வேலை மற்றும் வணிக ரீதியாக, பிற மாநிலங்களில் இருந்து, குடும்பத்துடன் தமிழகத்துக்கு வந்த, அரசு மற்றும் தனியார் துறையினரின் பிள்ளைகள்,


ஒன்பது அல்லது, 10ம் வகுப்பில், தமிழகத்தில் சேர்ந்திருந்தால், அவர்கள் மட்டும், தமிழ் தேர்வு எழுத விலக்கு தரப்பட்டு உள்ளது.சிறப்பு மதிப்பெண்இந்த அறிவிப்பால், குழப்பம் ஏற்பட்டுள்ளது. எட்டு, ஏழு, ஆறு என, மற்ற வகுப்புகளில் சேர்ந்த, பிற மொழியினர் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து, பள்ளிக்கல்வித் துறை உரிய நடவடிக்கை எடுத்து, 10ம் வகுப்பில், தமிழ் தேர்வு யாருக்கு கட்டாயம்; ஒன்பதாம் வகுப்புக்கு கீழ் சேர்ந்த மாணவர்களுக்கு விலக்கு உண்டா...இல்லையென்றால், அவர்களுக்கு தமிழ் பாட தேர்வில், சிறப்பு மதிப்பெண்கள் அளிக்கப்படுமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக