பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, நீட், ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு, மாதிரி தேர்வு நடத்த, தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், தேசிய உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் சேரவும், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிக்கவும், நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். சிறப்பு பயிற்சி
தனியார் பள்ளிகளில், நுழைவு தேர்வுக்கு, ஒன்பதாம் வகுப்பு முதல், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் தரப்படுகின்றன. ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் கிடைப்பது இல்லை. இதையடுத்து, தமிழக அரசின் சார்பில், 412 மையங் களில், இலவச நீட் பயிற்சி அறிவிக்கப்பட்டது; 100 மையங்களில் மட்டுமே, பயிற்சி அளிக்கப்படுகிறது.
வினாத்தாள்
எனவே, மற்ற பள்ளிகளின் மாணவர்கள் மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங்கில் சேர வசதியாக, அவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் இணைந்து, சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளனர். தனியார் பயிற்சி நிறுவனங் களிடம், மாதிரி வினாத்தாள்களை பெற்று, தங்கள் பள்ளி மாணவர்களுக்கு, பயிற்சி தேர்வுகள் நடத்த, நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஆதார் எண் பெற சிறப்பு முகாம்
பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் பெற, சான்றிதழ் விபரங்களை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், போலி மாணவர்கள் பட்டியலை தடுப்பது, நலத்திட்டங்களை உரிய மாணவர்களுக்கு வழங்குவது, மாணவர், ஆசிரியர் விகிதாச்சாரத்தை சரியாக நிர்ணயிப்பது போன்றவற்றுக்கு, ஆதார் எண்ணை பயன்படுத்த வேண்டும் என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக, அனைத்து மாணவர்களின் ஆதார் எண்களை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில், ஆதார் எண் இல்லாத மாணவர்கள், ஆதார் பதிவு செய்ய, இன்று முதல் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் மாணவர்கள், வீட்டு முகவரியுடன் கூடிய பள்ளி அடையாள அட்டை, பள்ளிகள் வழங்கிய அங்கீகார சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், ரேஷன் அட்டை, பாஸ்போர்ட் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றில், ஏதேனும் ஒன்றை ஆவணமாக பயன்படுத்தலாம் என, வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது.
போலியை நீக்க உத்தரவு
பள்ளிகளில், மாற்று சான்றிதழ் பெற்ற மாணவர்களின் விபரங்களை, 'எமிஸ்' இணையதளத்தில் இருந்து நீக்கும்படி, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் சரியான விபரங்களை சேகரிக்க, அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும், பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குனரகங்கள் உத்தரவிட்டுள்ளன.
இதன்படி, மாணவர்களின் பெயர், ஆதார் எண், பெற்றோர் பெயர், மாணவர்களின் மொபைல் எண், ரத்தப்பிரிவு உள்ளிட்ட விபரங்களை, கல்வி மேலாண்மை தகவல் தொகுப்பான, 'எமிஸ்' இணையதள தொகுப்பில் சேகரிக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து, அனைத்து மாணவர்களின் விபரங்களை, எமிஸ் இணையதளத்தில் சேகரித்து வருகின்றனர். இந்த தகவல் தொகுப்பில், பல பள்ளிகளில், மாற்று சான்றிதழ் வாங்கி சென்ற மாணவர்களின் விபரங்கள், போலியாக இடம் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.எனவே, அனைத்து பள்ளிகளும், எமிஸ் விபரங்களை சரிபார்த்து, பள்ளிகளில் இருந்து வேறு இடங்களுக்கு சென்ற, மாணவர் விபரங்களை உடனே நீக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக