லேபிள்கள்

29.1.18

'ஆசிட்' வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு

மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, மத்திய அரசின் அனைத்து துறைகளுக்கும் சமீபத்தில் கடிதம் ஒன்றை அனுப்பியது.
அதில், அனைத்து பணிகளிலும், குறைந்தபட்சம், 1 சதவீதத்தை, பார்வை குறைபாடு அல்லது குறைந்த பார்வை திறன் உடையோர், காதுகேளாதோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமானோர், 'ஆசிட்' வீச்சால் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்டோருக்கு ஒதுக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், 'ஆட்டிசம்' எனப்படும், மன இறுக்க பாதிப்பு உள்ளோர், புத்தி தடுமாற்றம், மன நோய் பாதிப்பு உள்ளோருக்கு, அரசு வேலைகளில், 1 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும்படி கூறப்பட்டு உள்ளது.மத்திய அரசின், ஏ, பி, சி ஆகிய பிரிவுகளில் நேரடி நியமனங்கள் நடந்தால், மொத்த பணியிடங்களில், 3 சதவீதம், உடல் ரீதியில், 40 சதவீதத்துக்கு அதிகமான குறைபாடுகள் உள்ளோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது, 4 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

கடந்த, 2016ல், மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமை தொடர்பான சட்டம் இயற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவர்களுக்கு, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக