லேபிள்கள்

2.2.18

மாணவர்களுக்கு சலுகை திட்டங்கள் : கல்வி முறையை மாற்ற அதிரடி முடிவு

சிறப்பான தேர்ச்சி பெற்ற முதல், 1,000 பி.டெக்., மாணவர்கள், முனைவர் 
பட்டப் படிப்பில் சேர, 'பெல்லொஷிப்' திட்டம், 24 புதிய மருத்துவக் 
கல்லுாரிகள் கட்டுதல் உட்பட, பல்வேறு கல்வித் திட்டங்கள், பட்ஜெட்டில்
 இடம்பெற்றுள்ளன.

'ஏகலைவா' பள்ளி : மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி, பார்லிமென்டில்

 நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், கல்விக்கு, 85,010 கோடி ரூபாய் 
ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 35,010 கோடி ரூபாய், உயர் கல்விக்கும், 50 
ஆயிரம் கோடி ரூபாய், பள்ளி கல்விக்கும் ஒதுக்கப்பட உள்ளது. வரும்,
 2022க்குள், கல்வி முறையையும், கல்வி கட்டமைப்பையும் முற்றிலும் 
மாற்றியமைக்க அரசு திட்டமிட்டுஉள்ளதாக, ஜெட்லி கூறினார். 
எஸ்.டி., பிரிவினர், 50 சதவீதத்துக்கு கூடுதலாக வசிக்கும் ஒவ்வொரு 
பகுதியிலும், குறைந்தபட்சம், 20 ஆயிரம் பழங்குடியினர் வசிக்கும் 
பகுதிகளிலும், நவோதயா வித்யாலயா பள்ளிகளுக்கு நிகராக, 'ஏகலைவா'
 பள்ளிகள் நிறுவப்படும் என, அவர் தெரிவித்தார்.

சன்மானம் : திட்டம் மற்றும் கட்டடக் கலைக்கென பிரத்யேகமாக இயங்கும்
, இரு பள்ளிகளை நிறுவப்போவதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. மேலும்
, ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில் நுட்பக் கழகம், என்.ஐ.டி., எனப்படும் 
தேசிய தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றின் கீழ், திட்டம் மற்றும் கட்டடக்
 கலைக்கென, 18 பள்ளிகள் செயல்பட உள்ளன. பிரதமர் பெல்லோஷிப் 
திட்டத்தின் கீழ், சிறப்பாக தேர்ச்சி பெற்ற, முதல், 1,000 பி.டெக்., பட்ட 
மாணவர்கள், ஐ.ஐ.டி., மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் 
மையத்தில், முனைவர் பட்டப் படிப்பை தொடர வாய்ப்பு வழங்கப்பட 
உள்ளது. இந்த மாணவர்களுக்கு, பெருந்தொகை சன்மானமாக 
வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக