'தொழிற்கல்விக்கான பட்டப்படிப்பை நடத்தும் கல்லுாரிகள், அங்கீ காரம்
பெற, வரும், 28க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, அகில இந்திய
தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., தெரிவித்துஉள்ளது.
இன்ஜினியரிங், மேலாண்மை மற்றும் தொழிற்கல்வி படிப்புகள் நடத்தும்
கல்லுாரிகளுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., சார்பில், அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
இன்ஜினியரிங் மற்றும் மேலாண்மை படிப்புக்கான அங்கீகாரம் வழங்கும்
பணிகள், இறுதி கட்டத்தில் உள்ளன. இந்நிலையில், தொழிற்கல்வி சார்ந்த
படிப்பு களை நடத்தும் கல்லுாரிகள், அங்கீகாரம் பெறுவதற்கு, 28ம்
தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்துஉள்ளது.
'ஆட்டோமோட்டிவ், பிரின்டிங் மற்றும் பேக்கிங்' தொழில்நுட்பம்,
'எலக்ட்ரானிக்ஸ்' உற்பத்தி சேவைகள், 'கிராபிக்ஸ், மல்டி மீடியா' மற்றும்
உணவு தயாரிப்பு ஆகிய படிப்புகளை நடத்தும் கல்லுாரிகள், அங்கீகாரத்துக்கு
விண்ணப்பிக்கலாம் என, ஏ.ஐ.சி.டி.இ., வெளியிட்ட அறிவிப்பில்
கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக