லேபிள்கள்

23.2.18

முதல்வர் நியமன முறை : பேராசிரியர்கள் கோரிக்கை

'அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், ஓய்வு பெறும் வயதில் உள்ளவர்களை, முதல்வராக நியமிக்கும் முறையை மாற்ற வேண்டும்' என, பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓய்வுக்கு முன் : இது குறித்து, பேராசிரியர் கள் கூறியதாவது: கல்லுாரி முதல்வர் பதவி என்பது, மிக முக்கியமான நிர்வாக பதவி. ஆனால், கல்லுாரி கல்வித் துறையின் பதவி உயர்வு நடவடிக்கையில், ஓய்வு பெறுவதற்கு, மூன்று அல்லது நான்கு மாதங்கள் உள்ள பேராசிரியர்களையே, முதல்வர்களாக தேர்வு செய்கின்றனர். அதே போல், அரசு உதவி பெறும் கல்லுாரிகளும், ஓய்வு வயதை நெருங்கும் பேராசிரியர்களையே, நேரடி பணி நியமனத்தில், முதல்வராக நியமிக்கின்றன. இவ்வாறு பதவி பெறுவோர், சில மாதங்களில் ஓய்வு பெறுவதால், முதல்வர் பதவி காலியாகி விடுகிறது. அப்போது, கல்லுாரிகளின் நிர்வாகப் பணிகளை பார்க்க, கூடுதல் பொறுப்பில் பேராசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்த பதவியை பெறவும், கடும் போட்டி ஏற்படுகிறது.
ஓராண்டு பொறுப்பு : கூடுதல் பொறுப்பு பெறும் பேராசிரியர்கள், வகுப்புகளை நடத்த முடியாமல், நிர்வாகப் பணிக்கு, அதிக நேரம் செலவிடும் நிலை உள்ளது. எனவே, முதல்வர் பதவி நியமனங்களுக்கு, தற்போதைய நிபந்தனைகளை மாற்றி, ஒரு கல்வி ஆண்டு முழுவதும், ஒரே முதல்வர் பதவியில் இருக்க, வழி ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக