லேபிள்கள்

19.2.18

தேர்வு முறைகேடுகளை தடுக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம்

பொது தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க, மாவட்ட வாரியாக, சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப் பட்டுஉள்ளனர். தமிழக பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை,
மார்ச்சில் பொது தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், பொது தேர்வை முறைகேடுகள் இன்றி நடத்த, 32 மாவட்டங்களுக்கும், சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்து உள்ளார். பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன், சென்னை; மெட்ரிக் இயக்குனர், கண்ணப்பன், காஞ்சிபுரம்; அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் திருவள்ளூர் மாவட்டங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர் என, உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக