அகர்தலா, :திரிபுராவில், பள்ளி ஆசிரியர்களின் தவறால், 'நீட்' தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு, தேசிய மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரையின்படி, தலா, இரண்டு லட்சம் ரூபாய் வழங்க, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
திரிபுராவில், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர், மாணிக் சர்க்கார் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின் மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள, ஏகலவ்யா உறைவிடப் பள்ளியைச் சேர்ந்த, 15 பழங்குடியின மாணவர்கள், கடந்த ஆண்டு, மருத்து நுழைவுத் தேர்வான, 'நீட்' எழுத விண்ணப்பித்தனர்.
இவர்களின் விண்ணப்பங்களை, ஆன்லைனில் பூர்த்தி செய்த ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர், உரிய காலத்தில் அதற்கான விண்ணப்ப கட்டணம் செலுத்த தவறிவிட்டனர். இதனால், 15 மாணவர்களும், நீட் தேர்வு எழுத முடியாமல் போனது.
இந்த விவகாரம் குறித்து விசாரித்த, தேசிய மனித உரிமைகள் ஆணையம், அந்த மாணவர்களுக்கு, தலா, இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, மாநில அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
மேலும், அவர்களுக்கு, இந்த ஆண்டுக்கான, 'நீட்' தேர்வை எழுத, இலவச பயிற்சி அளிக்கவும் பரிந்துரைத்துள்ளது. இதன்படி, 15 மாணவர்களுக்கும், மொத்தம், 30 லட்சம் ரூபாய் நிதி அளிக்க, மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக