தமிழகத்தில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் முகாம்களில், 'ஆசிரியர்கள், 50 சதவீதம் விடைத்தாள் திருத்தும் போராட்டத்தால்' தேர்வு முடிவு அறிவிப்பதில் தாமதமாகும் என, சந்தேகம் எழுந்துள்ளது.
பிளஸ் 2 தேர்வுகள் முடிவுற்ற நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள, 74 மையங்களில், ஏப்.,11 விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது. நாள் ஒன்றுக்கு மொழிப் பாடங்களுக்கு, 24; அறிவியல் பாடங்களுக்கு, 20 என, ஒரு ஆசிரியருக்கு விடைத்தாள் வழங்கப்படும். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதில், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின், 8,000 பேர் உள்ளனர். இச்சங்கம் சார்பில், ஏப்., 11 முதல் நுாதன போராட்டம் நடக்கிறது. இதன்படி ஆசிரியர்கள்,முகாமில் வழங்கப்படும் மொத்த விடைத்தாளில், 50 சதவீதம் மட்டும்திருத்தி, மீதமுள்ளதை நிலுவை வைத்து, மறுநாள் திருத்துகின்றனர். க்ஷ
இதனால், குறிப்பிட்ட நாட்களுக்குள் திருத்தும் பணி முடியாது. இதனால், கல்வித்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது போல், மே 16ல் முடிவு வெளியிடுமா என, சர்ச்சை எழுந்து உள்ளது. இது குறித்து, சங்கத்தின்மாநில நிர்வாகிகள் கூறுகையில், 'கல்வித் துறை செயலர், பிரதீப் யாதவ் எங்களை அழைத்து பேச வேண்டும். மிரட்டும் செயலில் ஈடுபட்டால் பணியமாட்டோம். போராட்டம் இன்னும் தீவிரமாகும்' என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக