லேபிள்கள்

20.4.18

ஆங்கில வினாத்தாளில் பிழை மாணவர்களுக்கு 2 மதிப்பெண்

 சமீபத்தில் நடந்து முடிந்த, 10ம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் ஏற்பட்ட எழுத்துப் பிழைக்காக, அந்த வினாவுக்கு விடை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும், இரண்டு மதிப்பெண் வழங்க,
சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது.புகார்சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படிக்கும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, கடந்த மாதம், ஆங்கிலப் பாடத்துக்கான தேர்வு நடந்தது.இந்த வினாத்தாளில், ஒரு வினாவில் எழுத்துப் பிழை இருந்தது. அந்த வினாவுக்கு, மாணவர்களால் சரியான விடை எழுத முடியவில்லை.இது குறித்து, இடைநிலை கல்வி வாரியத்திற்கு புகார் அனுப்பிய ஆசிரியர்களும், மாணவர்களும், குறிப்பிட்ட வினாவுக்கு கருணை அடிப்படையில் மதிப்பெண் வழங்கக் கோரினர்.முடிவுஇதையடுத்து, குறிப்பிட்ட வினாவில் எழுத்துப் பிழையை கவனித்த வாரியம், மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, அந்த வினாவுக்கு விடை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும், இரண்டு மதிப்பெண் வழங்க முடிவு செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக