விடைத்தாள் திருத்தும் பணிகளை புறக்கணிக்கும் போராட்டத்தை, 'ஜாக்டோ - ஜியோ' ரத்து செய்துள்ளது. ஜாக்டோ - ஜியோ என்ற, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின்
உயர்நிலை குழு கூட்டம், சென்னையில், நேற்று முன்தினம் நடந்தது. இதில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஏப்., 23 முதல், 27 வரை, 11 மண்டலங்களில், அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில், வேன் பிரசாரம் செய்யப்படும். அடுத்த கட்டமாக, மாவட்ட வாரியாக கூட்டங்கள் நடத்தப்படும். மே, 8ல், சென்னையில், கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். இதில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஒரு லட்சம் பேர் பங்கேற்பர்.அதேபோல், ஜாக்டோ - ஜியோ போராட்டங்கள், மாணவர்களின் நலனை எந்த விதத்திலும் பாதிக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். எனவே, பொது தேர்வுக்கான விடைத்தாள் திருத்த போராட்ட அறிவிப்பை ரத்து செய்வது என, முடிவு எடுத்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக