அரசு பள்ளிகளில் ஆங்கில வழியில் மேல்நிலை வகுப்புகள் தொடருமா என மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் 2012-13ல் துவக்கப்பட்டன. ஆறாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் தற்போது பத்தாம் வகுப்பு தேர்வை ஆங்கில வழியில் எழுதி உள்ளனர். பிளஸ் 1ல் ஆங்கில வழி கல்வி தொடருமா என கல்வித்துறை அறிவிப்பு வெளியிடவில்லை. இதனால், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாநில சட்ட செயலர் அனந்தராமன், துணை செயலர் கிறிஸ்டோபர் ஜெயசீலன் கூறியதாவது:மேல்நிலை வகுப்பில் அறிவியல், கலை என தமிழ் வழியில் எத்தனை பிரிவுகள் உள்ளதோ, அத்தனை பாடப் பிரிவுகளையும் ஆங்கில வழியிலும் துவக்க வேண்டும்.இல்லாதபட்சத்தில் தமிழ் வழியில் தான் படிப்பை தொடர வேண்டும். தேர்வு முடிவு அறிவிப்பதற்கு முன் இதுதொடர்பான அறிவிப்பை கல்வித்துறை வெளியிட வேண்டும். ஆங்கில வழி தொடர்ந்தால் ஒவ்வொரு பள்ளியிலும் ஐந்து பட்டதாரிகள், ஒன்பது முதுநிலை ஆசிரியர்களை கூடுதலாக நியமிக்க
வேண்டும், என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக