லேபிள்கள்

26.4.18

சி.பி.எஸ்.இ., மறு தேர்வு முடிந்தது

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொருளியல் பாடத்துக்கு, மார்ச், 26ல், பொது தேர்வு நடந்தது.
தேர்வுக்கு முதல் நாளில், தேர்வின் வினாத்தாள், 'வாட்ஸ் ஆப்'பில் வெளியானது. இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., தரப்பில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. அதில், வினாத்தாள், லீக் ஆனது உறுதியானது. இதுகுறித்து, புதுடில்லி சிறப்பு குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்துகின்றனர். இந்நிலையில், பொருளியல் பாடத்துக்கு மறு தேர்வு நடத்தப்படும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்தது. இதன்படி, பொருளியல் பாடத்துக்கான மறு தேர்வு, நேற்று நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இதில், நான்கு லட்சம் பேர் பங்கேற்றனர்.'மார்ச், 26ல் நடந்த தேர்வின் வினாத்தாளை விட, மறு தேர்வில், கேள்விகள் எளிதாக இருந்தது' என, மாணவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக