லேபிள்கள்

27.4.18

ஆசிரியர்கள் போராட்டத்தால் மாணவர்கள் மார்க் குறையும்?

ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியதால், பொதுத் தேர்வுக்கான விடைத்தாள்கள் அவசர கதியில் திருத்தப்பட்டுள்ளன. அந்த விடைத்தாள்களை ஆய்வு செய்ய, கோரிக்கை எழுந்துள்ளது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய பொது தேர்வுகளின் விடைத்தாள்களை திருத்தும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது. பெரும்பாலான ஆசிரியர்கள், விடை திருத்தத்தில் முழுமையாக பங்கேற்றுள்ளனர்.ஆனால், மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்த சிலர், ஒரு மணி நேரம் விடைத்தாள் திருத்தத்தை புறக்கணித்தனர். பட்டதாரி ஆசிரியர்கள் சிலர், பத்தாம் வகுப்பு விடைத்தாள்களை, பிற்பகலில் திருத்தாமல் புறக்கணித்தனர்.இந்த போராட்டங்களால், விடைத்தாள் திருத்தத்தில் குளறுபடி நடந்திருப்பதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு மணி நேரம் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள், அந்த நேரத்திற்கான விடைத்தாள்களையும் சேர்த்து, அவசர, அவசரமாக திருத்தியுள்ளனர். அதனால், விடைக் குறிப்புகளை சரியாக பார்க்காமலும், விடைத்தாள்களை முழுமையாக ஆய்வு செய்யாமலும், மதிப்பெண் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.இந்த அவசர திருத்தத்தால், பல மாணவர்களுக்கு மதிப்பெண்கள் குறைந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.எனவே, ஆசிரியர்கள் போராட்டம் நடந்த மையங்களில், திருத்தப்பட்ட விடைத்தாள்களை மறு ஆய்வு செய்து, மாணவர்கள் பாதிக்காமல் இருக்க, நடவடிக்கை எடுக்கும்படி, பெற்றோர் தரப்பில் வலியுறுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக