லேபிள்கள்

13.7.18

கால்நடை மருத்துவ படிப்புக்கு 24ல் கவுன்சிலிங் துவக்கம்

கால்நடை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூலை, 24 முதல் 26ம் தேதி வரை, நடைபெற உள்ளது.
தமிழகத்தில், கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்புக்கு, நான்கு அரசு மருத்துவ கல்லுாரிகளில்,

360 இடங்கள் உள்ளன.அதேபோல், பி.டெக்., என்ற உணவு தொழில்நுட்பம் மற்றும் கோழியின படிப்புக்கான, 40 இடங்கள்; பால்வள தொழில்நுட்ப படிப்பில், 20 இடங்கள் என, மொத்தம், 460 இடங்கள் உள்ளன.
இந்த படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், இம்மாதம், 3ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்தேதியை, கால்நடை மருத்துவ பல்கலை நேற்று வெளியிட்டுள்ளது.இதன்படி, சென்னை, வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லுாரியில், ஜூலை, 24 முதல் 26ம் தேதி வரை, மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இதில், சிறப்பு பிரிவினர் மற்றும் தொழிற்கல்வி மாணவர்களுக்கான கவுன்சிலிங், 24ம் தேதியும், பொது பிரிவினருக்கான கவுன்சிலிங், 25, 26ம் தேதிகளிலும் நடைபெறும்.கவுன்சிலிங் மதிப்பெண்கள், தரவரிசை பட்டியல், அழைப்பு கடிதம் ஆகியவை,www.tanuvas.ac.in,www2.tanuvas.ac.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கவுன்சிலிங் தகுதியுள்ள மாணவர்கள், குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில், தங்கள் அழைப்பு கடிதம், தேவையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேரில் வர வேண்டும்.கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதியுள்ள மாணவர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மற்றும், இ - மெயில் வழியாக தகவல் அனுப்பப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக