தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் - 2 ஏ' தேர்வு எழுதியோருக்கு, வரும், 16ம் தேதி முதல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 2017, ஆக., 6ல், 'குரூப் - 2 ஏ' பதவிகளில் அடங்கிய பணிகளுக்கு, தேர்வு நடத்தப்பட்டது. இதில், 6,836 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து, இ - சேவை மையங்கள் வழியே அனுப்ப, ஏப்., 23 முதல் மே, 9 வரை அவகாசம் தரப்பட்டது. இதில், 6,171 பேர் மட்டும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தனர்.
அவர்களில், 2,229 பேரின் சான்றிதழ்களில், சில குறைகள் கண்டறியப்பட்டன. அவர்களை நேரில் அழைத்து, சான்றிதழ்களை சரிபார்க்க, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது. இவர்கள், ஜூலை, 16 முதல் 23ம் தேதி வரை, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்திற்கு நேரில் வந்து, சான்றிதழ்களை சரிபார்த்து செல்ல வேண்டும். இந்த விபரங்கள், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக