லேபிள்கள்

13.7.18

உயர்கல்வி கமிஷன் சட்டம் கருத்து கூற அவகாசம் நீட்டிப்பு

புதிய உயர்கல்வி கமிஷன் சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க, வரும், 20ம் தேதி வரை, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி நிறுவனங்களை கண்காணித்து, அவற்றுக்கு நிதி உதவி செய்யும், மத்திய பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி.,யை கலைத்து விட்டு, புதிய உயர்கல்வி கமிஷன் அமைக்க உள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. 
இதற்கான வரைவு சட்டம், http://mhrd.gov.in/ என்ற இணையதளத்தில், ஜூன், 27ல் வெளியிடப்பட்டது. இந்த கமிஷன் அமைப்பதற்கு, நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.இந்நிலையில், புதிய சட்டம் குறித்து, பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்க, ஜூலை, 7 வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் படிப்படியாக நீட்டிக்கப்பட்டு, தற்போது, ஜூலை, 20 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதுவரை, reformofuqc@qmail.com என்ற, இ - மெயிலுக்கு கருத்துகளை அனுப்பலாம் என, மத்திய மனிதவள அமைச்சகம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக