லேபிள்கள்

27.10.13

மாநில அறிவியல் கண்காட்சி போட்டி: தாம்பரத்தில் நவம்பர் 28ல் துவக்கம்

பள்ளி மாணவர்களின், அறிவியல் திறனை மேம்படுத்த, அடுத்த மாதம், 28ம் தேதி முதல், 30ம் தேதி வரை, மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டி, தாம்பரத்தில் நடக்க உள்ளது' என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அந்த அறிக்கை விபரம்: தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் (மெட்ரிக் உட்பட) பயிலும் மாணவர்களின், அறிவியல் திறனை ஊக்குவிக்கும் வகையில், அறிவியல் நாடகம், அறிவியல் கண்காட்சி, கணித கருத்தரங்கு நடத்த வேண்டும். இதற்கான போட்டிகளை பள்ளி அளவில், வரும், 28ம் தேதியும், கல்வி மாவட்ட அளவில் வரும், 31ம் தேதிக்குள்ளும் நடத்த வேண்டும். அடுத்த மாதம், 11ம் தேதி, வருவாய் மாவட்ட அளவில் போட்டி நடத்தி, மாணவரை தேர்வு செய்ய வேண்டும். இதில், மண்டல அளவிலான போட்டியில் தேர்வு செய்ப்பட்டவர்கள், அடுத்த மாதம், 28ம் தேதி முதல், 30ம் தேதி வரை, தாம்பரம் ஜெயகோபால் தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடக்கும், மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக