'மக் - அப்' மாணவர்கள் உயர் கல்வியில் 'பேக் - அப்' அடிப்படை காரணம் என்ன?
அடிப்படை கல்வியின்மையால் மாணவர்களின் உயர்கல்வியில் பின்னடைவு ஏற்படுவதுடன், போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற முடியாத நிலை உருவாகிறது. சில பள்ளிகளில் பொதுத் தேர்வுக்கான பாடத்திட்டங்களை, அதற்கு முந்தைய வகுப்புகள் முதலே நடத்தப்படுவதால் இந்நிலை ஏற்படுவதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பிளஸ்2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவன், கல்லூரிகளில்
"அரியர்' வைப்பது ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால், அப்பின்னடைவுக்கான காரணத்தை உற்றுநோக்கினால், பள்ளிகளில் முக்கிய கட்டத்தை (9,
11ம் வகுப்புகள்) எட்டும் மாணவர்களுக்கு, அடிப்படை கல்வி கிடைப்பதில்லை என்பதுதான். சில பள்ளிகளில் பொதுத்தேர்வுக்கான பாடத்திட்டங்களை அதற்கு முந்தைய வகுப்புகள் முதலே நடத்தப்படுகிறது; இதனால், அடிப்படை கல்வி கிடைக்காமல், பாடங்களை மனப்பாடம்செய்யும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர், என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், உயர் கல்வியில் மாணவர்களுக்கு பின்னடைவு ஏற்படுவதுடன், டி.என்.பி.எஸ்.சி., மற்றும் இதர போட்டித் தேர்வுகளில் தோல்வியுறும் நிலை உள்ளது. அடிப்படை கல்வியறிவின் குறைபாட்டால், வெற்றிக் கனவு கலைந்துபோகிறது.
ஐ.ஏ.எஸ்., பயிற்சியாளரும், அரசு கலைக் கல்லூரி பேராசிரியருமான கனகராஜ் கூறுகையில், ""சில பள்ளிகளில் பிளஸ்1 வகுப்பில் பிளஸ்2 பாடங்களும், ஒன்பதாம் வகுப்பில் 10ம் வகுப்புக்கான பாடங்களும் முன்னதாகவே நடத்தப்படுகின்றன. இதனால், மாணவர்களுக்கு அடிப்படை கல்வி கிடைப்பதில்லை. இயற்பியல், புவியியல் உள்ளிட்ட பாடங்களில் மையக் கருத்தை புரிந்து படிக்க வேண்டும்; மாறாக மனப்பாடம் செய்கின்றனர். பிளஸ் 2வில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கூட கல்லூரியில்
"அரியர்' பெறுகின்றனர், அடிப்படை கல்வி குறைபாட்டால், ஆராய்ச்சி படிப்பில் பெரியளவில் பின்னடைவு ஏற்படுகிறது,'' என்றார்.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"பள்ளிகளில் பொதுத்தேர்வுக்கான பாடங்களை முந்தைய வகுப்புகளில் நடத்தக்கூடாது என, அரசு கண்டிப்பாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து, புகார் ஏதேனும் வந்தால், நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக